Monday, January 21, 2008

தைப்பூசத்தன்று முத்துக்குமரன் தரிசனம்

கந்த கோட்டம்







தை பூசத்தன்று ஜோதியான வள்ளலார் சுவாமிகள் "தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்தில் வளர் தலமோங்கு கந்த வேளே" என்று பாடிய முத்துக் குமார சுவாமியின் திருக்கோவிலைப் பற்றி இப்பதிவில் பார்ப்போமா?


ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சக உருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டை மண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடிய வள்ளலார் சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபா சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லி, வனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும், உடம்பு முழுவதும் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் மேலும் சண்முகசுவாமி, மற்றும் ஞான தண்டாயுதபாயாகவும் எழுந்தருளி சோமசுந்தரர், மீனாக்ஷ’ மற்றும் சித்தி புத்தி சமேத விநாயகருடன் அ அருள் பாலிக்கின்றார் ஸ்கந்தன் இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். வாருங்கள் அந்த அழகன் முருகன் கொஞ்சி விளையாடும் அவன் தலத்தை தரிசிப்போம்.



இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் அப்போது கிருத்திகை தோறும் சென்னையிலிருந்து திருப்போரூர் சென்று
சுயம்புவாக சிதம்பரம் சுவாமிகளுக்கு காட்சி தந்து அருள் பாலித்த கந்த சுவாமியை, ஒரு கை முகன் இளவளை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடளை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில் தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகனைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில் சித்தி புத்தி விநாயகர் சன்னதி மட்டுமே இவ்விடத்தில் இருந்தது.



தன் மனைவியின் நகைகளை விற்று திருக்கோவிலை உண்டாக்கினார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு த்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பக்கு தங்களை அர்ப்பத்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லு‘ரிகள், நு‘ல் லையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான்.மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான்.


அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை சீரமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண் அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர்.



திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது.




இக்கோவிலைப் பற்றி கூறும் போது திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. வள்ளலார் சுவாமிகளுக்கு அந்த ஞானத்தை அளித்தவர் தான் கந்த சுவாமி. ஒரு சமயம் வள்ளலார் சுவாமியின் ஆசிரியர் எல்லாவற்றையும் ஆகாது, கூடாது, முடியாது என்று எதிர் மறையாகவே கூறிக்கொண்டிருந்த போது வள்ளலார் எழுந்து ஐயா எதிர் மறையாகவே பேசாமல் நேர் மறையாக உரையாடலாமே என்ற போது ஆசிரியர் எங்கே நீ நேர் மறையாக பாடு என்ற போது பாடிய திருஅருட்பா




ஒருமையுடன் னதுதிரு மலரடி னைக்கின்ற



உத்தமர்தம் உறவு வேண்டும்


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான

பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்


மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்


தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்

வளர் தலமோங்கு கந்த வேளே


தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி

சண்முகத் தெய்வமணியே.


என்று தெய்வ மணி மாலையில் பாடுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.
இவ்வளவு புகழ் பெற்று அழகுடனும் அருளுடனும் எழுந்தருளி தைப்பூச பிரம்மோற்சவம் கண்டருளும் முத்துக் குமரனை, கந்தவேளை, கடம்பனை, கார் மயில் வாகனனை வணங்கி நன்மை அடைவோமாக.



இவ்வாறு அம்பலத்தாடும் அரசை ஆடையிலே மணந்த மணவாளனை, பொதுவில் நட்டம் நவிலும் நாதனை வேண்டி வள்ளலார் பாடிய இன்னொரு பாடல்


அப்பாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும
தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநிணைப் பிரியாத நிலைமையும் வேண் டுவனே.

No comments: