Friday, April 11, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் -1


அனுமந்தபுரம் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் அருளிய


திருக்காரணி சொர்ணாம்பிகை நவரத்ன மாலை


காப்பு
ஆக்கும் மணி மாலை ஆணை முகன் தாள் பணிந்து
கோக்கும் படி சிந்தை கூடுவாம் - பூக்குமே
நற்குடி வாழ் நனி நல்லதிருக் காரணிப்
பொற்கொடி
சூடும் பொருட்டு.

மாணிக்கம்




நிழலாய் விளங்கி நின்றென்றும்
நினையே நெஞ்சில் நினைவேற்கு
நிதியாய் நோற்றுப் பணிகின்ற
நிட்டை நிதஞ்சேர் நான்முகியே




குழகன் அணியுங் கொன்றைத்தார்க்
குழலாய் கோலத்தொழிலோடு
குறையில் மாணிக்கமே சூட
குன்றாக் குழையைக் கொண்டனையோ



வழகார் இதயம் வாழ்கின்றாய்
வரையோன் பெற்ற வார்ச் சடையாய்
வளங்கொள் நின்றன் விளையாட்டின்
வண்ணம் உலகாம் வான்முகிலே



அழகார் மதுரை மீனாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.





சென்னை மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரம் சொர்ணாம்பிகை நவரத்தின மாலையிலிருந்து மாணிக்க பாடலை சேவித்தோம். இனி முதல் நாள் இரவு மாவடி சேவையின் திருக்காட்சிகளைக் காணலாம்.





தொண்டை மண்டலத்தில் முதல் நாள் இரவு சிவ பெருமான் அத்தலத்தின் ஸ்தல விருக்ஷத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். காரணீஸ்வரத்தின் ஸ்தல விருக்ஷம் மா மரம். எனவே காரணீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் நூதன மாவடி சேவை தந்தருளுகின்றார் .



முதல் நாள் இரவு உற்சவம்

நூதன புஷ்ப மாவடி சேவை


சிவ சொர்ணாம்பிகை


முருகர்



காரணீஸ்வரர் மாவடி சேவை



திரிபுவன சக்ரவர்த்தி, த்ரயம்பகேஸ்வரர் திரிபுர சுந்தரியுடன் செங்கோல் ஏந்தி சேவை சாதிக்கும் அழகே அழகு.






No comments: