Saturday, May 16, 2009

சிவசொரூபக் காட்சி

பெருவிழாக்களில் பத்தாம் திருநாள் இரவு திருக்கல்யாணம். அடுத்த நாள் காலை சிவ சொரூப காட்சி உற்சவம். சில தலங்களில் இந்த உற்சவத்தை உமாமஹேஸ்வர தரிசனம் என்றும் அழைக்கின்றனர். இந்த உற்சவத்தின் தாத்பர்யத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

என்னங்க மற்ற பதிவுகளில் எல்லாம் நிறைய படங்கள் இருக்கும் இப்பதிவிலோ ஒரே ஒரு படம் அதுவும் நேற்றைய படம் போல உள்ளதே என்றால் நீங்கள் சரி.

அலங்காரம் நேற்றைய திருக்கல்யாண அலங்காரம்தான். ஆனால் தத்துவ விளக்கம் தான் அருமையோ அருமை. சகல புவனத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் வி்ளையாடும் ஆதி தம்பதியினரின் ஐக்கியமே சிவ சொரூபக் காட்சி. திருக்கல்யாணம் முடிந்த பின் அடுத்த நாள் காலை அம்மையப்பர் ஐக்கியமாக நமக்கு வழங்குகின்ற காட்சி. ஸ்ரீ சக்ரத்தில் நடுவில் உள்ள பிந்து சிவ சக்தி ஐக்கியத்தை குறிக்கின்றது. அந்த ஸ்ரீ சக்கரத்தை பிரம்மாண்டமாக் கொண்டால் அனைத்து பிரம்மாண்டமும் சிவசக்தி ஐக்கியத்தில் இருந்து ஒன்றாகத் தொடங்கி பிரம்மாண்டமாக பலவாறாக விரிந்து காட்சி தருகின்றது, பின் பிரளய காலத்தில் அனைத்து பிரம்மாண்டமும் அழிந்து அனைத்தும் சிவ சக்தி ஐக்கியத்தில் முடிகின்றன. எல்லாம் எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே ஐக்கியம். அதாவது அனைவரும் சிவசொரூபமே என்னும் அரிய உண்மையை உணர்த்துவதே இந்த சிவசொரூபக் காட்சியின் உண்மை தாத்பர்யம். இதை நாம் உணர்ந்தால் நம்முள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்றும் நாம் உணரலால். நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விடுத்து அந்த பதியுடன் இணையலாம்.

பதினோறாம் காலை ஆதி தம்பதியினர் நமக்கு அருட்காட்சி தருகின்ரனர். முதலில் கோ பூஜை பின் கற்பூர நீராஞ்சனம், பின் பத்து நாட்களும் பெருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்து கைங்கரியம் செய்த அனைவருக்கும் அம்மையப்பருக்கு இரவு படைக்கப்பட்ட நைவேத்யம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

5 comments:

JAGADEESWARAN said...

SUPPER PHOTO

Anonymous said...

//அனைவரும் சிவசொரூபமே என்னும் அரிய உண்மையை உணர்த்துவதே இந்த சிவசொரூபக் காட்சியின் உண்மை தாத்பர்யம். இதை நாம் உணர்ந்தால் நம்முள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்றும் நாம் உணரலால். நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விடுத்து அந்த பதியுடன் இணையலாம்.//

அனைவரும் உணர்ந்து உய்வு பெற அம்மையப்பர் அருள் புரியட்டும்.

நம்ம பார்வதி பதியே!
ஹர ஹர மஹா தேவா!!

S.Muruganandam said...

வாருங்கள் ஜகதீஸ்வரன் ஐயா, தங்களுக்கு படம் பிடித்ததா? இல்லையா என்று புரியவில்லை.

S.Muruganandam said...

//அனைவரும் உணர்ந்து உய்வு பெற அம்மையப்பர் அருள் புரியட்டும்.

நம்ம பார்வதி பதியே!
ஹர ஹர மஹா தேவா!!//

பதிவு எழுதியதின் பலனைப் பெற்றேன்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

Unknown said...

superbbbbb