Sunday, August 23, 2009

பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை





எள்ளு பொரித்த பொரியும் இடித்தவல் தன்னிற்கலந்து
வள்ளிக்கிழங்கை திருத்தி வாழைப்பழத்தை யுரித்து
உள்ளியபாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத்திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே

ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
நூறுகுடலை மாம்பழம் நொடிக்குமளவி லமுது செய்
வல்ல பிள்ளாய்ஆடல் பாடல் சங்கீதம்
அடியேன் காண
நின்றாடாயே சண்டுபெருச்சாளி மீதேறிச்
சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாய
இணங்கிய கொம்பேரிண்டூத அண்டத்தமரர் துதிக்க
அடைக்கலங்காத்த பிரானாரே
குண்டைக்கணபதி நம்பிகுடங்கையாற் சப்பாணி கொட்டாயே

பொழுது விடிந்துபொழுது
போய்திருமலை மேலேற வேண்டும்
ஏறிமலர்ந்துபூ கொய்ய வேண்டும்
கொய்து திருமுடி சாத்தவேண்டும்
சாத்தியே கைகட்டி நிற்க வேண்டும்
நின்று திருவிளக்கேற்ற வேண்டும் ஏற்றி அரகரா என்ன வேண்டும்
ஐயா கணபதி நம்பி ஆயிரநாமமுடையாய்பொய்யில்லா
மெய்யுரைப்பாய் போனதெல்லாம் தருவாய்
வெள்ளித்தாம்பூலம் பூசி
வைத்து வேண்டும்படியே யிட்டுண்டு
பள்ளிற்கேற்ப நடவாய் பாக்கியம்
செய்த பிள்ளாய்
பிள்ளாய் பிள்ளாய் பேருடையீர் பிரமனெனும் பேருடையீர்
பிள்ளைகள் தங்கள் பிரானாரே இருந்தீரே பிரானாரே
எங்கள் மனது கலங்காதோ பள்ளித்தடுக்கும் கையேடும்
படிக்கும்
சுவடியும் பரித்தெடுத்து துள்ளித்திரியும் கால்தன்னை
சுகமே நிறுத்தும்
பிரானாரே ஒடாதே ஒளியாதே
இட்டதே சோறும் பெற்றதே கறியும் உண்டுதூங்கி பூசை முடித்து
வெள்ளிமுளைக்கப் பள்ளிக்கு வாரும்.


பிள்ளையார் நம் பிள்ளைகளைப் போல் பள்ளிக்கு சென்றால் எப்படி இருக்கும் என்று கூறும் பாடல். அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.