Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 5

நவராத்திரி ஐந்தாம் நாள்


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்


காளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸ சராசரம்

கல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் ||


(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.)



நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில், அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.

ஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்கா. அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள். அம்பாளின் ஸ்லோகம்

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |

சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||

சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.

இன்றைய தினம் சைதை காரணீஸ்வரம் சொர்ணாம்பாள் மற்றும் செங்குந்தகோட்டம் விசாலாக்ஷி அம்பாள் அலங்காரக் கோலத்தைக் காணலாம்

சொர்ணாம்பாள் மீனாக்ஷி அலங்காரம்




விசாலாக்ஷி அம்பாள் மீனாக்ஷி திருக்கோலம்



சொர்ணாம்பாள் மீனாக்ஷி அலங்காரம்


ரோக நிவாரணி அஷ்டகம்

திருமக ளானாய் கலைமக ளானாய்

மலைமகளானாய் துர்க் கையளே |

பெருநிதி யானாய் பேரறி வானாய்

பெருவலி யானாய் பெண்மையளே ||

நறுமலரானாய் நல்லவளானாய்

நந்தினி யானாய் நங்கையளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநி வாரணி ஜெய துர்க்கா || (5)



அம்மன் அருள் வளரும்

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நன்றி..

S.Muruganandam said...

அன்னையின் பல்வேறு அலங்காரங்களை கண்டு களித்ததற்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி.