Sunday, September 28, 2014

நவராத்திரி நாயகி - 6

பல்வேறு ஆலயங்களின் அம்மன் அலங்காரங்கள்


 பிரஹத் சுந்தர குஜாம்பாள் 

மீனாக்ஷி அலங்காரம்




ஆலயம்: மகாலிங்கேஸ்வரர் ஆலயம், மஹாலிங்கபுரம் , சென்னை. 

******************



விசாலாக்ஷி ஊஞ்சல் 




பழனி மலைக் கொலு 

ஆலயம் : காசி விஸ்வநாதர் ஆலயம், மேற்கு மாம்பலம்,     சென்னை
********************



சொர்ணாம்பாள் அன்னபூரணி அலங்காரம் 




சொர்ணாம்பாள்  மீனாக்ஷி அலங்காரம் 

ஆலயம்: சொர்ணபுரீஸ்வரர் ஆலயம், அசோக்நகர் , சென்னை 

******************


சலதி உலகத்திற் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்

தாயல்லாவோ? யான் உந்தன் மைந்தன் அன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி என் முகத்தினை உன் 
முந்தாணையால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இள நிலா
முறுவலும் பூத்து அருகில் யான்

குலவி விளையாடல் கண்டு அருள் மழை பொழிந்து அங்கை
கொட்டி வா என்று அழைத்துக்

குஞ்சரமுகன் குமரனுக்கு இளையன் என்று எனைக்
கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (9) 

பொருள்: அபிராமி அன்னையே! இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ஈன்றெடுத்த அன்னை நீ அல்லவா? அப்படியென்றால் நீ எனக்கும் அன்னைதானே, எனது கவலைகளைப் போக்கி, உன்னுடைய முலைப்பாலை ஊட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து, என் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்து , மகிழ்ச்சியுடன் விளையாடுவது கண்டு மகிழ்ந்து, அருள் மழை பொழிந்து அன்பு திருக்கரங்களால் வா என்று அழைத்து , விநாயகனுக்கும், முருகனுக்கும் இளையவன் என்று கூறினால் அதனால் தங்களுக்கு ஒரு தாழ்வு ஏற்படுமோ? . அலைகள் நிறைந்த   கடலில் தோன்றிய தெவிட்டாத அமுதமே! ஆதி கடவூரில் உறைபவளே ! அமுதீசர் இடப்பாகம் அகலாத அனையே! கிளியைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!  அருள் புரியும் அபிராமியே! என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அபிராமிபட்டர்.   


                                                                                                                                                                         அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: