Monday, September 25, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 7

ஆறாவது ஆவரணம்  


மேற்கு மாம்பலம்  விசாலாக்ஷியம்மன் 
ஊஞ்சல் சேவை 



கொலு கொடி மரத்தில் கொடி ஏற்றியுள்ளனர் 

திருமயிலை   அங்காளம்மன் 

திரௌபதியம்மன் 

முண்டகக்கண்ணியம்மன்
 சரஸ்வதி அலங்காரம் 




**************


ஆறாவது ஆவர்ணம்

ராகம் - புன்னாகவராளி                                                                  தாளம் - ரூபகம்

பல்லவி

கமலாம்பிகாயாஸ்தவ  பக்த்தோஹம்  ஹம்சங்கர்யா:
ஸ்ரீகர்யா: சங்கீத ரஸிகாயா   ( ஸ்ரீகமலாம்பிகாயா)

அனுபல்லவி

ஸுமஸர இக்ஷு கோதண்ட பாஸாங்குஸ பாண்யா: 
அதி மதுர தர வாண்யா: ஸர்வாண்யா: கல்யாண்யா:

மத்யமம்
ரமணீய புன்னாக வராளீ விஜித வேண்யா:  (ஸ்ரீகமலாம்பிகாயா..)

சரணம்

தச கலாத்மக வஹ்நி ஸ்வரூப பிரகாஸாந்தர்த்தஸார
 ஸர்வ ரக்ஷாகர சக்ரேஸ்வர்யா: திரிதஸாதிநுத
 கசவர்கத்வயமய ஸர்வஜ்ஞாதிதஸ சக்தி ஸமேத
 மாலினி சக்ரேஸ்வர்யா:  திரிதஸ விம்ஸத்வர்ண கர்பிணீ குண்டலிந்யா:

தசமுத்ரா ஸமாராதித கௌளிந்யா;தஸரதாதி நுத குருகுஹ-ஜநக ஸிவபோதிந்யா:
தஸகரண வ்ருத்தி மரீசி நிகர்ப யோகிந்யா: (ஸ்ரீகமலாம்பிகாயா)

பக்தர்களுக்கு அளப்பரிய  செல்வத்தை அள்ளி வழங்கும், சங்கீத ரசிகையான பரமசிவனின் பத்னியுமான  கமலாம்பிகையின் பக்தன் யான்.

நான்கு திருக்கரங்களில்  மலரம்புகள், கரும்பு வில், பாசம், அங்குசம் தரித்திருப்பவள். மிகவும் இனிமையான குரல் உள்ளவள்,  சர்வன்  பரமசிவனின் பத்னி  மங்கல வடிவினள் கமலாம்பிகையின் பக்தன் யான்.

புன்னை மலர்களில் வாசம் செய்யும்  கருவண்டுகளை பழிக்கும்  கரிய கூந்தலை உடையவள், புன்னாகவராளி ராகத்திற்கும் ஆடும் ஸர்பத்தைபோல ஆடும் கூந்தல் அளாகாபாரம் உடையவளுமான ஸ்ரீகமலாம்பிகையின் பக்தன் யான்.

பத்து கலைகளை கொண்ட  அக்னி ஜுவாலையின் மத்தியில், பத்து தளமுடைய ஸர்வரக்ஷாகரம் என்னும் சக்கரத்தில் மிளிர்பவள், தேவர்களால் துதிசெய்யப்பட்ட க மற்றும் ச என்ற எழுத்துக்களான ஸர்வஜ்ஞாதி சக்திகளான பதின்மரோடு கூடிய மாலினீ ஸக்ரேஸ்வரியாக இருப்பவள்.

முப்பது மற்றும் இருபது அக்ஷரங்களை உள்ளடக்கிய குண்டலிநீ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பவள், தசமுத்ரா தேவியரால் துதிக்கப்படும் கௌலீனீயாக இருப்பவள், தசரதர் போன்ற பேரரசர்களால்  துதிக்கப்படுபவள், குருகுஹனை உலகுக்கு அளித்தவள், சிவபெருமானின் சிவஞானபோதம் அருளும் சிவஞான பிரதாயினீ இவளே, இந்திரியங்களின் செயல்பாடுகளின் கிரணங்கள் வடிவான நிகர்ப்ப யோகினிகளாக இருப்பவள், இவ்வளவு சிறப்புகள் பெற்ற  ஸ்ரீ கமலாம்பிகைக்கு நான் பக்தன்.

ந்த ஆறாம் ஆவரணத்தின் சக்ரம் சர்வ ரக்ஷாகர சக்ரம் ஆகும். இச்சக்ரம்  உள் பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுராமாலினி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி நிகர்ப்ப  யோகினி. அவஸ்தை உபதேசம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் ஸர்வஸம்க்ஷோபினி  முதலான பதின்மர் ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், இசை ஞானம், குரல் வளம், பேச்சாற்றல், மங்கலங்கள் பெருகும், நோய்கள் நெருங்கா, கர்ம ஞானேந்திரியங்கள் ஆற்றலுடன் விளங்கும், மனோரதங்கள் கைகூடும். 


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு




                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

No comments: